தமிழக மக்களின் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. ரேஷன் கார்டு மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கார்டு தொடர்பாக அரசு தொடர்ந்து புதிய புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு புதிய அறிவிப்பு வெளியானது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் விரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாளாக டிசம்பர் 31ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தகுதி இல்லாத சிலரின் பெயர்களும் நீக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சரிபார்க்கவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யவும், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு கட்டாயம் என உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு விரல் ரேகை பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இன்னும் விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரம் மூலம் ரேஷன் கார்டு உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
