ஆந்திராவின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற 2026 ஜூன் 2 முதல் சட்டப்பூர்வமாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News