தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அமமுக, சசிகலா, ஓபிஎஸ் அணியினரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்த நிலையில், பாஜக தனது கூட்டணியில் அமமுகவை இணைக்க முடிவு செய்தது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பாஜக அதிமுக, தமாகா, பாமக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போன்றவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன். பழைய விஷயங்களை நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடாது என்று நோக்கத்தோடு முடிவெடுக்கிறோம். நாங்கள் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை’ என்று கூறியுள்ளார்.
