அம்பேத்கார் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.