தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பாஜக.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பாஜக தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என அமித் ஷா அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக வுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.