அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் சந்திப்பு நடந்தது. பாஜக கூட்டணி குறித்து பேசியதாக தகவல் பரவி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதனை மறுத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை, தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசினேன்” என்று தெரிவித்தார்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக பார்க்கப்படும் உள்துறை மந்திரி அமித்ஷா” என புகழ்ந்து பேசியுள்ளார். ஆர்.பி. உதயகுமார் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.