நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல அளவிலான பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் ஆளுனர் தமிழிசைசவுந்தர்ராஜன், தேசிய மகளிரணி தலைவர் வானதிசீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது :
தமிழ்நாட்டு தமிழ் மக்களாகிய உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாமனிதர் நாகாலாந்து ஆளுநராக பதவியில் இருக்கும்போது திடீரென்று இறைவனடி சேர்ந்து விட்டார். தன் வாழ்க்கையே பாரதிய ஜனதா கட்சிக்காக தியாகம் செய்த அந்த மாமனிதரின் ஆன்மா அமைதி பெற வேண்டும் என்று அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி நான் இங்கே என் உரையை தொடர்கிறேன்.
பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஏனென்றால் இந்த மண்ணைச் சேர்ந்த தமிழரான சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை நாட்டின் மிகவும் உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதி ஆக முன்னிறுத்தி இருக்கிறார்.
துணை குடியரசுத் தலைவர் தான் அந்த சபாநாயகராக ராஜ்யசபையிலே இந்த தமிழ் மண்ணை சேர்ந்த திருமகனான சிபிஆர் அவர்தான் வீற்றிருக்கக் போகிறார்.
ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை குடியரசுத் தலைவர் என்ற மிக உயரிய பொறுப்பிலே நாம் அமர்த்தி அழகு பார்த்தோம்.
பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் தமிழுடைய முக்கியத்துவத்தையும் உணர்ந்தவராக தான் இருந்திருக்கிறார்.
திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து திருக்குறளுக்கு மரியாதை சேர்த்திருக்கிறார்.
மதத்தின் பெயரால் கொலை செய்த மிகப்பெரிய துக்ககரமான ஒரு நிகழ்வுகள் பகல்காமில் நடைபெற்றது. அப்போது நமது பாரத பிரதமர் மோடி அவர்கள், இந்த தீவிரவாத தாக்குதலை வேரோடு அழிப்போம் என்று சபதம் போட்டார். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட ஒவ்வொரு தீவிரவாதியின் வீட்டில் புகுந்தும் தாக்கி அவர்களை அழித்து ஆபரேஷன் சிந்துர் மூலம் சாதனை படைத்திருக்கிறார்.
பிரதமர் முதல்வர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தால் சிறைக்கு சென்றான் பதவியை இழக்க நேரிடும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி பொன்முடி போன்ற பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள் சிறையில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்கலாமா?
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.