Tuesday, April 1, 2025

அமெரிக்கர்கள் நமது நெய்யைதான் விரும்புகிறார்கள் – அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது, அமெரிக்கர்கள் நமது நெய்யைதான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்ன துரை, கரம்பக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம் அரசு கட்டி தருமா? என்று இன்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜாகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் நிதி கொடுத்தால் கட்டடம் கட்டி தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது என்று கூறினார். ஆவின் நெய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை அதிகமாக விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார். .

Latest news