Wednesday, March 12, 2025

இந்தியர்களை ஏலியன்ஸ் என கூறி வீடியோவை பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியர்கள் 104 பேர் அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானத்தில் அழைத்து வந்த போது, கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் விடியோவை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Latest news