30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதில் 10 சதவீத ஊழியர்களே பணி நீக்கம் செய்ய இருப்பதாக அமேசான் கூறியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு முதல் ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இந்த பணி நீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News