Saturday, December 6, 2025

HR ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்

உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், தனது மனிதவளத் துறையில் (HR) 15 சதவீதம் வரை பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.

People eXperience and Technology (PTX) என அழைக்கப்படும் அமேசானின் HR குழுவில் உலகளவில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 1500 பேர் இப்பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின் சில முக்கிய நுகர்வோர் சார்ந்த வணிகப் பிரிவுகளிலும் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் ஏற்கனவே 25000த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதால் டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்த பணிநீக்கம், நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News