Monday, January 26, 2026

ஒன்றரை கிலோ எடையுள்ள அதிசயத் தக்காளிப் பழம்

ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு தக்காளிப் பழத்தின் வீடியோ
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு பூசணிக்காய்போல் உள்ள இந்தத் தக்காளிப் பழம்
இரண்டடி உயரமுள்ள செடியில் விளைந்துள்ளது. Big zac
என்னும் ஹைபிரிட் ரகத்தைச் சேர்ந்த இந்த அதிசயத் தக்காளிப் பழம்
இமாச்சலப் பிரதேசத்தில் 120 நாட்களில் விளைந்ததாகக் கூறப்படுகிறது-

சராசரியாக ஒரு தக்காளிப் பழம் 50 கிராமுக்கும் குறைவான
எடையுள்ளதாகத்தான் விளையும். ஆனால், ஒரே பழம் ஒன்றரை
கிலோவுக்கும் அதிகமான எடையுடன் விளைந்துள்ளது அனைவரையும்
ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

இந்த ஒரு பழமே ஒரு குடும்ப சமையலுக்கே தாராளமாகப் போதும்.

சாம்பார், ரசம், சட்னி, ஜாம், ஊறுகாய், சூப் என அனைத்துக்கும்
இந்த ஒரு தக்காளிப் பழமே போதுமானது. ஒரு வாரத்துக்கு
சாலட் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உடல் பருமனைக் குறைக்கத் தக்காளிப் பழத்தைத் தொடர்ந்து
சாப்பிடலாம் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். அந்தத் தக்காளிப் பழமே
இப்படி பூசணிக்காய் மாதிரி குண்டாக இருந்தால்…

Related News

Latest News