திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் மட்டுமே பலரும் வாழை இலையில் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடத்தையும் பிளாஸ்டிக் இலைகள் கைப்பற்றி விட்டது.
பண்டைய காலம் முதலே தமிழர்களால் உணவருந்த பயன்படுத்த படும் வாழை இலைக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ பயன்கள் ஏராளம். வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் முடியை கருப்பாகும்.
வாழை இலையை வைத்து பேக் செய்யும் உணவு சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருப்பதோடு மணமாகவும் இருக்கும். உணவில் இருக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது வாழை இலை.
வாழை இலையில் இருக்கும் Chlorophyll உணவை எளிதில் செரிமானம் ஆக வழி வகுக்கிறது. மேலும், வாழை இலையின் மீது சூடான உணவை பரிமாறி சாப்பிடும் போது, அதில் உள்ள நுண்சத்துகள் உடலுக்கு கிடைக்கும்.
இதனால், வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி நோய் தாக்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், வாழை இலையில் வழக்கமாக சாப்பிடுவதால் சரும பளபளப்பு அதிகமாவதோடு மந்தம், உடற்சோர்வு, களைப்பு மற்றும் பித்தமும் சீராகும் என இயற்கை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.