Saturday, December 21, 2024

மூட்டு வலியை விரட்ட மறக்காம முருங்கைக்காய் சாப்பிடுங்க!

பலருக்கும் விருப்பமான காயாக விளங்கும் முருங்கைக்காயில்  A, C மற்றும் B complex விட்டமின்கள் நிறைந்துள்ளன.

கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து உள்ள முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்த சோகை உள்ளிட்ட உடல் உபாதைகளை தவிர்க்க முடியும்.

கண் பார்வை, செல் வளர்ச்சி, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் முருங்கைக்காயில் உள்ள சத்துக்களின் பங்களிப்பு அதிகம். உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு இரத்த சக்கரை அளவுகளையும் சீராக பராமரிக்க உதவுகிறது.

மூட்டு வலி மற்றும் உடல் வலிக்கு தசைகளில் ஏற்படும் உள்வீக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வலி நிவாரணத்திற்கு முருங்கைக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் பெரிதும் உதவுகிறது.

முருங்கைக்காயை சூப் செய்து உட்கொள்ளும்போது சிறப்பான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள முருங்கைக்காய், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

வலுவான எலும்புகள், பற்கள் தொடங்கி பொலிவான சருமம் கிடைப்பது வரை பங்களிக்கும் முருங்கைக்காயின் சத்துக்களை பெற அவ்வப்போது அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Latest news