Saturday, February 7, 2026

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அங்கு அல்லு அர்ஜுன் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கூட நெரிசலே உயிரிழப்புக்கு காரணம் எனவும் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன், சந்தியா திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

Related News

Latest News