Friday, June 27, 2025

அத்தனையும் ‘நடிப்பா’ கோப்பால்? சீனாவுடன் அமெரிக்கா ‘திடீர்’ கூட்டணி

இஸ்ரேல் -ஈரான் நாடுகளின் போரால் ரகசியமாக அமெரிக்கா, சீனா நாடுகள் குளிர் காய்ந்துள்ளன. அண்மையில் வெளியான செய்தியொன்று அதை உறுதி செய்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் இவ்வளவு பெரிய அளவில் வெடித்தற்கு வல்லரசு நாடான அமெரிக்காவே முக்கிய காரணம். இஸ்ரேலுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தை இஸ்ரேலுக்கு ஆதரவாக இறக்கினார்.

இதைப்பார்த்த சீனா ஐ.நா சபைக்கு சென்று, ” ஈரான் மீதான தாக்குதல் மூலம் ஒரு நாடாகவும், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பாளராகவும் அமெரிக்கா தன்மீது இருந்த நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. நீங்கள் இதை கண்டிக்க வேண்டும்,” என்று நீலிக்கண்ணீர் வடித்தது.

சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், இன்னும் ஒருபடி மேலே சென்று, ”ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களையும், IAEA-வின் பாதுகாப்புகளின் கீழ் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதையும் சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஐ.நா. விதி மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை கடுமையாக மீறுகின்றன,” என்று கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இந்தநிலையில் அமெரிக்கா – சீனா நாடுகள், அண்மையில் சத்தமில்லாமல் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு Don கணக்கில் அதிர்ச்சி அளித்துள்ளன. இதுகுறித்து அதிபர் டிரம்ப், ” இது உண்மையில் நம்ப முடியாத விஷயம். நாங்கள் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். நேற்றுதான் அதில் கையெழுத்திட்டோம். விரைவில் இந்தியாவுடனும் மிகப்பெரிய ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டுடனும் எங்களின் உறவு நன்றாகவே உள்ளது, ” என்று மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார்.

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. என்றாலும் இரு நாடுகளும் பூமிக்கு அடியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் வர்த்தகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ” இஸ்ரேல் – ஈரான் போர்ல ரெண்டு நாடும் மாறி மாறி அடிச்சுக்கிட்டீங்க. இப்போ என்ன திடீர் பிரெண்ட்ஷிப்? அப்போ அத்தனையும் நடிப்பா கோப்பால்?, ” இவ்வாறு விதவிதமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news