ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பெரிய நகங்களுடன் கூடிய அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது.
உலகில் பல இடங்களில் அடையாளம் காண முடியாத வடிவங்களை அறிவியலில் Unidentified Flying Objects என்று அழைக்கப்படுகிறது. அடையாளம் கண்டிட முடியாத பறக்கும் பொருள்கள். பறக்கும்தட்டு என்னும் போதே ஏலியன்கள் ஞாபகம் வந்துவிடும். இதுவரை அதற்கான நம்பக ஆதாரங்கள் குறைவுதான். அறிவியலாளர்கள் தொடர்ந்து ஏலியன் குறித்த ஆராச்சியில் ஈடுபட்டு உள்ளனர் .
https://www.instagram.com/p/Cbr1F0ljeK2/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
மேற்கத்திய நாடுகளில் அடிக்கடி ஏலியன்களை பார்த்தோம் பறக்கும் தட்டுகளை பார்த்தோம் என அவ்வப்போது செய்திகள் வெளியாவதும், அவற்றை விஞ்ஞானிகள் மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் கண்டிப்பாக நம்மைப் போன்ற பேசக்கூடிய சிந்திக்கக்கூடிய கிரகவாசிகள் இருக்கலாம் எனவும் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இணையத்தில் மிகப்பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ள ஒரு மர்ம உயிரினம்.
இந்த மர்ம உயிரினம் ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் நபர் ஒருவர் காலை நடைப்பயிற்சி சென்றபோது , அவர் கண்ணில் தென்பட்டுள்ளது . ஆனால் அந்த மர்ம உயிரினம் இறந்த நிலையில் உள்ளது. இதற்கு முன் இது போன்ற உயிரினத்தை கண்டதில்லை எனவும் , இது வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்ததாக மக்கள் கூறும் நிலையில் இதுவும் அதேபோல் தான் என்கிறார் அந்த நபர்
ஆஸ்திரேலிய கடற்கரையில் விசித்திரமான உயிரினங்கள் கரை ஒதுங்குவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் சிட்னியில் உள்ள வாரியவுட் கடற்கரையில் ஒரு வினோதமான உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.