ஆல்கஹால் கொண்ட மவுத்வாஷ் (Mouthwash) பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சில முக்கிய பக்கவிளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆல்கஹால் கொண்ட மவுத்வாஷ் பயன்படுத்துவதால் வாயில் எரிச்சல், வலி, வாய்ப்புண்கள், மற்றும் வாய்வறட்சி ஏற்பட்டுச் செய்யும். இதனால் வாயின் மென்மையான திசுக்கள் சேதமடைந்து வாயில் அழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிகமாக மவுத்வாஷ் பயன்படுத்தினால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து தீங்கு ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாகும்.
வாய் வறண்டிருக்கும்போது, ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது ஈறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. வாய் வறண்டு இருப்பதால், பேசுவதிலும், உணவை மென்று விழுங்குவதிலும் சிரமம் ஏற்படலாம்.
எந்த மவுத்வாஷ் பயன்படுத்தலாம்?
ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷ்களைப் பயன்படுத்துவது வாய் வறட்சியைக் குறைத்து, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். உங்கள் மவுத்வாஷில் ஆல்கஹால் உள்ளதா எனப் பார்த்து, அதற்கேற்ப சரியான மவுத்வாஷைத் தேர்ந்தெடுப்பது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.