Sunday, December 28, 2025

AK 62 படத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்…எதிர்பாராத மாற்றங்கள்!

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க இருந்த படம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, AK 62 படத்திற்கு மகிழ் திருமேனி இயக்குநராக ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் பில்லா, வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா, இந்த படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் அருண் விஜய் மற்றும் அருள்நிதி இருவரும் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் எனவும், படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News