தென் கிழக்கு தில்லியான போகல் பகுதியில் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்னையால் நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் ஆசிப் குரேஷி (42) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஹுமா குரேஷி ரஜினிகாந்த்தின் காலா மற்றும் அஜித் குமாரின் வலிமை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.