Friday, December 27, 2024

தாடிக்கு குட்பை சொன்ன அஜித்! ஏர்போர்ட்டில் கூடிய ரசிகர்கள்

விஜயின் வாரிசு படமும் அஜித்குமாரின் துணிவு படமும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆக உள்ளது இரு தரப்பு ரசிகர்களையுமே விறுவிறுப்பான மனநிலையில் வைத்துள்ளது.

துணிவு படத்திற்கான டப்பிங் பணிகளையும் அஜித் முடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அஜித்தின் ஸ்டைலிஸ்ட் அவர் தாடியுடன் இருந்த மற்றும் தாடி இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த photo மட்டுமில்லாமல், அஜித் புதிய look உடன் விமான நிலையத்திற்கு செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், விமான நிலையத்தில் தன்னுடன் selfie எடுக்க விரும்பிய ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Latest news