சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தனிப்படை போலீசார் தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
இது தொடர்பாக தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கர மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ ஐந்து காவலர்களின் செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அந்த தகவல்களில் ஐந்து காவலர்கள் சம்பவத்துக்கு முன்பும், சம்பவம் நடைபெற்ற போதும், அதற்கு பின்னரும் யார், யாரிடம் பேசினர். எது தொடர்பாக பேசினர், என்ன பேசினர் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்துள்ளதாக தெரிகிறது.
அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கும் என்று தெரிகிறது.