தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் அஜித்..இது மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.
இவர் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அந்த வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் போட்டோ எடுத்துக்கொண்டார். தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.