மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இந்த நிலையில், மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு பாரமதியில் இன்று காலை 11 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
முன்னதாக, அஜீத் பவாரின் மறைவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
