Sunday, February 23, 2025

மொபைல் ரீசார்ஜ், JioHotstar ‘சப்ஸ்கிரிப்ஷன்’ – IPL ரசிகர்களுக்கு செமத்தியான ‘சர்ப்ரைஸ்’

Jio, Hotstar நிறுவனங்கள் ஒன்றிணைந்து தற்போது JioHotstar ஆக உருவெடுத்துள்ளது. Jio வசம் விளையாட்டு ஒளிபரப்பு உரிமைகளும், Hotstar வசம் திரைப்படங்களும் இருக்கின்றன. இந்த இணைப்பின் மூலம் பயனர்கள் இனி, அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டுகளிக்கலாம்.

இதற்கிடையே வரும் மார்ச் 22ம் தேதி IPL துவங்குகிறது. இதுநாள்வரை இலவசமாக இந்த தொடரை பயனர்களுக்கு அளித்து வந்த Jio, தற்போது கட்டண முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆரம்ப சந்தா 149 ரூபாயாக உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, Airtel சில ‘ஸ்பெஷல்’ ரீசார்ஜ் திட்டங்களுக்கு இலவச JioHotstar சப்ஸ்கிரிப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் முறையே 28, 84, 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கின்றன.

அதன்படி 28 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்தின் விலை 398 ரூபாய். நாளொன்றுக்கு 2 GB டேட்டா, தினசரி 100 SMS, மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கிடைக்கும். இதோடு JioHotstar சப்ஸ்கிரிப்ஷன், இலவச காலர்டியூன் வசதிகளும் உண்டு.

84 நாட்கள் அதாவது மூன்று மாத ரீசார்ஜ் திட்டத்தின் விலை 1029 ரூபாய். இதில் தினசரி 2 GB டேட்டா, 100 SMS, மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கிடைக்கும். இத்துடன் 3 மாத காலத்திற்கு JioHotstar சப்ஸ்கிரிப்ஷன், இலவச காலர்டியூன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆகியவற்றை, பயனர்கள் அனுபவித்து மகிழலாம்.

இதேபோல 1 வருடம் அதாவது 365 நாட்களுக்கான ரீசார்ஜ் 3999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் நாளொன்றுக்கு 2 GB டேட்டா, தினசரி 100 SMS, மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கிடைக்கும். இத்துடன் JioHotstar சப்ஸ்கிரிப்ஷன், ஏர்டெல் எக்ஸ்டிரீம் பிளே, இலவச காலர்டியூன், 5G டேட்டா ஆகியவற்றை பயனர்கள் ‘என்ஜாய்’ செய்ய முடியும்.

IPL நெருங்கி வருவதால் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு, Airtel இந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதற்கு Jio, VI மற்றும் BSNL நிறுவனங்கள் எப்படி பதிலடி தருகின்றன என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news