Monday, February 2, 2026

ஷாக் கொடுத்த ஏர்டெல்., இனி இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியாது..!

ஏர்டெல் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் இணைத்து வழங்கி வந்த Perplexity Pro AI இலவச சந்தாவை நிறுத்தியுள்ளதால், லட்சக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த திடீர் மாற்றம், ஏர்டெல் வாடிக்கையாளர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும், Perplexity Pro நிறுத்தப்பட்டதற்கு பதிலாக, தற்போது Adobe Express Premium-க்கான இலவச அணுகலை ஏர்டெல் வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு, ஏர்டெல் தனது சில ரீசார்ஜ் திட்டங்களுடன் Perplexity Pro AI சந்தாவை இலவசமாக வழங்கத் தொடங்கியது. இந்த சந்தாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.17,000 ஆகும். ஆனால் இது நிரந்தர சலுகை அல்ல என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் ஏர்டெல் அப்போது தெளிவுபடுத்தியிருந்தது. அந்த வகையில், இந்த சலுகை ஜனவரி 16, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இருந்து Perplexity Pro AI சந்தாவை முழுமையாக நீக்கியுள்ளது. இதன் காரணமாக, இனி ரீசார்ஜ் செய்யும் புதிய பயனர்களுக்கு இந்த AI சந்தா கிடைக்காது.

இதற்கிடையில், ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் கூகுள் ஜெமினி (Google Gemini) AI-க்கான இலவச சந்தாவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News