நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சொகுடோ மாகாணம் சிலிமி பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக நைஜீரிய பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 10 பேர் உயிரிழந்தனர்.