பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்த எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் பால்கனியில் நிற்க கூடாது என்றும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.