டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு ‘450’ என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
