Thursday, February 5, 2026

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.., அவசர அவசரமாக தரையிறக்கம்

தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

புக்கெட் தீவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI 379 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.

நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து 156 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News