ஆரணி MGR சிலை முன்பு தனக்கும் தனது மனைவிக்கும் பதவி வழங்காததை கண்டித்து அதிமுக தொண்டர் ஒருவர் சாலையில் வேட்டியை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆர் சிலை உள்ளது. திடீரென MGR சிலை வந்து நின்ற மொரப்பதாங்கல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, அலப்பறையில் ஈடுபட்டார். மேலும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக கரை துண்டு அணிவித்து வேலு,
தனது வேட்டி சட்டையை அவிழ்த்து அரை நிர்வாணமாக சாலையில் படுத்து அலப்பறையில் ஈடுப்பட்டார்.
குறிப்பாக தானும் தனது மனைவியும் எம்.ஜி.ஆரின் விசுவாசியாக பல ஆண்டுகள் அதிமுகவில் உள்ளதாக கூறிய அவர் ,எங்கள் இருவருக்கும் பதவி வழங்காமல் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஒதுக்கிவிட்டதாக கூறினார் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.