Wednesday, January 14, 2026

2026 இல் அதிமுகவிற்கு மூடுவிழா நடத்திவிடுவார் – டிடிவி தினகரன் பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி 2026 இல் அதிமுகவிற்கு மூடுவிழா நடத்திவிடுவார் என்பதை கட்சி நிர்வாகிகள் உணரத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடு தான் செங்கோட்டையனின் கருத்து என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்தை ஏற்பதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் மற்றும் கோல இந்திரா ஆகியோர் உணர்ந்துகொண்டது போல், மற்ற நிர்வாகிகளும் இதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 2026 தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணி அமைக்கும் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

Latest News