திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுகவுக்கு ஷாக்

கடந்த 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தனியரசு அதிமுக கூட்டணியிலேயே இருந்தார். 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் சமீப காலமாக அதிமுகவின் உள்கட்சி பிரச்சினைகள், தலைமை நடைமுறை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், அவர் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது அடையாளத்தையும் வலிமையையும் இழந்துவிட்டதாக தனியரசு கூறியுள்ளார். அடிப்படை தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்றும், ஒருதலைப்பட்சமான தலைமையே கட்சியை பலவீனப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Related News

Latest News