Saturday, December 27, 2025

அதிமுக எம்.பி. தம்பிதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களாக அவருக்கு உடல் நலக் குறைபாடு இருந்ததால், இன்று காலை அவர் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலையைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News