Thursday, December 25, 2025

மோதல் தொடர்கிறதா? சபாநாயகர் அறைக்கு செங்கோட்டையன்

கடந்த மாதம் கோவையில் அத்திக் கடவு – அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Related News

Latest News