Monday, December 22, 2025

கைகளில் கருப்பு பட்டை அணிந்தபடி சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.

இந்நிலையில் தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது. அப்போது சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்தபடி வந்தனர்.

கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

Related News

Latest News