Monday, July 7, 2025

‘அதிமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்கும் நிலை உருவாகும்’ – திண்டுக்கல் ஐ. லியோனி பேட்டி

காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பாஜக கூட்டணி பிரிந்த போது வெடி வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய அதிமுகவினர், தற்போது மீண்டும் இணைந்த நிலையில் அதை கொண்டாட கூட இல்லாத வெறுப்பு சூழ்நிலை உள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு இருக்கும் தைரியம் கூட  எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. தமிழக அரசின் செயல் திட்டங்களை பார்த்து அதிமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்கும் நிலை இன்னும் மூன்று மாதத்தில் உருவாகிவிடும்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நர்சரி பள்ளிக்கூட முதல்வராக தகுதி இல்லை. பக்கம் பக்கமாக பேப்பரை வைத்துக்கொண்டு பேசியும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நிலையிலேயே கட்சியை நடத்திக் கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news