அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அதிமுக தொடர்ச்சியாக 11 வது முறை தோல்வி அடைந்து விட்டதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “எடப்பாடி பழனிசாமியிடம்தான் அதிமுக கட்சி இருக்கிறதா? என்பது முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளிலே தெரிகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறது என்றும், முன்பை விட மிகுந்த நம்பிக்கை உடன் வந்து புகார் அளிக்கிறார்கள்” என்று பேட்டியளித்துள்ளார்.