முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தார். மேலும், தனது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று மாலை 4 மணிக்கு ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டார். தற்போது மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளதால், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-
தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். வேறொரு கட்சியின் சொல்பேச்சை கேட்டு அதிமுக வழி நடத்தப்படுகிறது. பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது என கூறியுள்ளார்.
