தமிழகத்திலேயே முதல் முறையாக 126 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தை அதிமுகவினர் அமைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். மேலும், தமிழகத்திலேயே மிக உயரமான 126 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு கொடிக்கம்பத்தின் பணிகளை பார்வையிட்டார்.