தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த கூட்டணியை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து விலகியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.