அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, இன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
