அதிமுக – பாஜக கொள்கை இல்லாமல் சந்தர்ப்பவாத அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
அவரது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் என்று அமித் ஷா கூறுகிறார் என்றும், ஆனால், அதிமுகவின் தனித்த ஆட்சி தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இவற்றிலேயே ஒத்த கருத்துக்கு வர முடியாதவர்கள் எப்படி ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பார்கள்? என்று பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். கொள்கை இல்லாமல் சந்தர்ப்பவாத அடிப்படையில் கூட்டணி அமைத்தால் இப்படி ஏட்டிக்குப் போட்டியாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
