திருப்பத்தூர் மாவட்டத்தில் 13, 14 தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்கிற பேரணி நடைபெற உள்ளது. அவரை வரவேற்க, அதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேனர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பேனர் காற்றில் கிழிந்து சாலையில் இருசக்கர வாகனம் மீது விழுந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.