அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக வினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ந்தேதி தொடங்கியது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9,000-க்கும் மேற்பட்டோரிடம் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
