த.வெ.க. தலைவர் விஜய்யை அண்ணா பாராட்டி பேசுவது போல் AI வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் “அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன். இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா’ என்பது உள்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.
