சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஏஐ உதவியாளரை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 7 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சாட் செய்தோ, பேசியோ, அல்லது வீடியோ கால் மூலமாகவோ காவல்துறையினருடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த அமைப்பு ஏற்கனவே உள்ள போலீஸ் டேட்டாபேஸ்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் FIR மற்றும் CSR கண்காணிப்பு, டிராஃபிக் சலான்களை செலுத்தும் முறை, உரிமம் மற்றும் NOC பெறுதல், மற்றும் IMEI சரிபார்ப்பு போன்ற சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.
இந்த AI அமைப்பு, எழுத்து மற்றும் குரல் மூலமான உரையாடல்களை கையாளும் திறன் கொண்டது. AI அமைப்பு ஒரு கேள்வியை தீர்க்க முடியாவிட்டால், அது தானாகவே ஒரு நேரடி உதவி மையத்திற்கு உரையாடலை மாற்றும். இந்த திட்டம் ஏழு மாதங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
