50 வயதில் தன் உடம்பில் 85 சிறிய ஸ்பூன்களை ஒட்டவைத்து உலக சாதனை புரிந்துள்ளார் ஒருவர்.
ஈரானைச் சேர்ந்தவர் அபோல்பாசல் சபர் மொக்தாரி. 50 வயதாகும் இவர் 85 சிறிய சில்வர் கரண்டிகளைத் தன் கழுத்தைச் சுற்றி அடுக்கி வைத்து அவை கீழே விழாமல் அடுக்கிவைத்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சிறுவயதிலிருந்தே தனது உடம்பில் சிறிய கரண்டிகளை சமநிலைப்படுத்தி ஒட்டவைத்து வரும் மொக்தாரி, நான் குழந்தையாக இருந்தபோது தற்செயலாக என்னுடைய இந்தத் திறமையைக் கவனித்தேன். பல வருட முயற்சி மற்றும் பயிற்சிக்குப் பிறகு, என்னுடைய திறமையை வலுப்படுத்தி தற்போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, பிளாஸ்டிக், கண்ணாடி, பழம், கல், மரம் உள்பட எந்தப் பொருளையும் என் உடம்பில் ஒட்ட வைக்கமுடியும் என்றுகூறி அதிரவைக்கிறார்.
தனது உடம்பிலுள்ள இந்த அதிசயத்திறனை வேறு பொருட்களுக்கு மாற்றவும் முடியும் என்று தெரிவித்து திகைப்பூட்கிறார் இந்த அரிய சாதனையாளர் மொக்தாரி.
சாதிக்க நினைத்துவிட்டால், அசாத்தியமான செயலையும் சாத்தியமாக்கிவிடலாம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அதில், மொக்தாரியின் செயலும் ஒன்றாகத் திகழ்கிறது.