Friday, May 16, 2025

பாகிஸ்தான் சம்பவத்திற்கு பிறகு … அடுத்த அதிரடிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்குள் நடைபெற்ற ஒரு அதிரடி பதிலடி நடவடிக்கை. இதன் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அரசு மிகப் பெரிய பாதுகாப்பு முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, 2025-26ம் நிதியாண்டில், பாதுகாப்பு ஒதுக்கீடு ₹7 லட்சம் கோடிக்கு மேல் உயர வாய்ப்பு உள்ளது. இதற்காக ₹50,000 கோடி கூடுதலாக செலவிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு ஏன் முக்கியமாக பார்க்கப்படுகிறது தெரியுமா?

சமீபத்திய எல்லை தாண்டிய நடவடிக்கையிலே, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை, பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணை போன்றவை சிறப்பாக செயல்பட்டன. மேலும், பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை ஊடுருவல்களை ரஷ்ய S-400 வான் பாதுகாப்பு அமைப்புடன் சேர்ந்து இந்தியா வெற்றிகரமாக தடுத்தது, பாதுகாப்பு நிதி அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்த புதிய பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறும் தெரியுமா?

மேம்பட்ட ஆய்வும் வளர்ச்சியும் இதில்  முக்கிய இடம் பிடிக்கின்றன…

அடுத்ததாக நவீன இராணுவ வன்பொருள் கொள்முதல்…

மற்றும் வான் பாதுகாப்பு உபகரண மேம்பாடு….

இதெல்லாம் இந்தியாவின் பாதுகாப்பு புள்ளிகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறபடுகிறது.

இதோடு மட்டுமல்ல, கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ₹23,622 கோடி. இந்த எண்ணிக்கையை 2029க்குள் இரட்டிப்பாக்கும் இலக்கை அரசு வைத்துள்ளது.

ஆத்மநிர்பர் பாரத் என்னும்  இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்புகள் இப்போது உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுவது போல், இந்தியா இனி வாங்கும் நாடு அல்ல — விற்றும், பாதுகாப்பு துறையில் முன்னணியில் இருக்கும் நாடு.

இந்த ஆபரேஷன் சிந்தூர் வெற்றியும், அதற்குப் பிந்தைய நிதி உயர்வும், இந்தியா உலக பாதுகாப்பு மேடையில் ஒரு சக்திவாய்ந்த பங்காளியாக உருவெடுக்கச் செய்யும்.

Latest news