கம்பளிப்பூச்சியை இனி சாக்லேட்டா சாப்பிடலாம்!

218
Advertisement

கம்பளிப்பூச்சி என்றாலே பலரும் அருவருப்பாக பார்ப்பது இயல்பு.

தெரியாமல் தொட்டுவிட்டாலே, உடலை கூச வைக்கும் கம்பளிப்பூச்சியை சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது என சொன்னால் நம்ப முடிகிறதா?

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ரசாயண பொறியாளரான வெண்டி வெசேலா கருப்பு கம்பளிப்பூச்சியில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்பு சத்து இருப்பதை கண்டறிந்து, அதை சாப்பிடக் கூடிய வகையில் மாற்றும் முயற்சியில் களம் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளார்.

கம்பளிப்பூச்சிகளை மாவாக்கி பின் சாக்லேட், பிஸ்கட் என விதவிதமாக செய்து அசதி வருகிறார் வெண்டி.

பல பழங்குடியின மக்கள், ஊட்டச்சத்து மிகுந்த பூச்சிகளை உணவில் சேர்த்து கொள்வதால் மேம்பட்ட உடல் நலனுடன் உள்ளார்கள் என கூறும் வெண்டி, கம்பளிப்பூச்சிகளின் மேல் உள்ள தவறான புரிதலை தள்ளிவைத்துவிட்டு இது போன்ற உணவு பண்டங்களை உட்கொண்டு ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.